திரைப்பட நடிகர் சித்திக் 8 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு  உட்படுத்தியதாக குற்றம்சாட்டிய நடிகை, கடந்த செவ்வாய்க்கிழமை அவரது மீது புகார் கொடுத்தார். இந்த புகார், மாநில காவல்துறை தலைவருக்குப் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது, மலையாள திரைப்படத் துறையில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விசாரணையை மேற்கொண்டு வரும் விசாரணைக் குழுவுக்கு (SIT) அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகாரளித்த நடிகை, 2016 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஓர் ஓட்டலில் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி பேசுவதற்காக அழைத்ததாக அவர் கூறினார். 

சமீபத்தில் பாலியல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளராக இருந்து விலகிய சித்திக், நடிகைக்கு எதிராக அடுத்த நாள் புகார் அளித்து, அவர் மீது அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது புகழை அளிக்க நினைப்பதாக கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் எந்த அளவிற்கு அவர் தன்னை முன்னுறுத்தியுள்ளார் என்பதை அந்த பெண் வீடியோ வாக்குமூலமாக அளித்துள்ளார் கீழே இணைக்கப்பட்டுள்ளது.