சென்னை திரு வி க நகர் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவரது ஐந்து வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட மகளை சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தாயும், மருத்துவர்களும் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தந்தையே பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவரது கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.