சமீபத்தில் பேடிஎம் பேமண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்தது மார்ச் 17ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பேடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்தனர் . இதுகுறித்து புதுப்புது அப்டேட்களும் வந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் பேடிஎம் பயனாளர்ர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது .

ஏனெனில் பேடிஎம் வாலட்டை பயன்படுத்தும் 85 சதவீத வாடிக்கையாளர்கள் மார்ச் 15 க்கு பின்  எளிதாக பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது  PAYTM  பயன்படுத்தும் 85 சதவீத பயனர்கள் தங்களுடைய ஒழுங்குமுறை நடவடிக்கையில் எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.