கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் குமுளி பகுதியிலும் அரிசி கம்பன் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து வனத்துறையினர் லாரி மூலம் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பதில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர். யானை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அதனுடைய காதில் ரேடியோ காலர் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் மூலமாக வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யானையின் காதில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை என்பதனால் அதிகாரிகள் பயந்த நிலையில் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அப்பர் போதையாறு பகுதியில் எங்கும் பசுமை நிலவுவதால் அரிசி கொம்பனுக்க்கு நல்ல உணவு கிடைக்கிறது. அதற்கு தேவையான தண்ணீரும் அங்கு கிடைப்பதால் அதனை குடித்து நன்றாக இளைப்பாரி வரும் நிலையில் அரிசி கொம்பன் யானை உண்ட மயக்கத்தில் புல்வெளியில் படுத்து அயர்ந்து தூங்கும் காட்சி தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரிசி கொம்பனுக்கு தற்போது ஏதுவான இடம் அமைந்து விட்டதாகவும் எனவே இனி குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் மனதுறையினர் கூறியுள்ளனர்.