தமிழ் சினிமாவில் வெளியான நகைச்சுவை பேய் படங்களின் வரிசையில் அரண்மனை திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்தார்.

இந்த படத்தில் நடிகைகள் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த நிலையில் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்நிலையில் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ‌ அரண்மனை 4 திரைப்படம் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.