
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது. இணைய பயன்பாடுகளும் 4 ஜியிலிருந்து 5 ஜி என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. இந்நிலையில் ஒடிசாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2023 – 2024ஆம் கல்வியாண்டு முதல் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மாணவர்கள் தலா 1ஜிபி இலவச டேட்டாவை பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா கட்சி இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.