நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் INDIA கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ZEE நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி 1, அதிமுக கூட்டணி 2 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்த கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக, பாஜக சில இடங்களிலேயே வெல்ல வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.