
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தில் அம்மாக்களை போற்றி வணங்குவோம். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மண்ணுலகில் உயிர்களை எல்லாம் மண்ணிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, அவனியின் ஆதார சுருதியாய் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பின் மொழியை அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புத கடவுள். அன்னையின் தூய அன்பிற்கு இந்த உலகில் வேறு ஈடு இணை எதுவும் இல்லை.
தரணி போற்றும் நம்முடைய தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதே போன்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.