பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு சில சமயங்களில் வீடு கிடைத்து விடும்.  இந்நிலையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் 3.50 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 9 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் பணி 2026 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வோம்” என கூறினார்.