
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் 8 நாட்களில் வாத்தி திரைப்படம் 75 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் வாத்தி திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் விரைவில் 100 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BLOCKBUSTER RESULTS ❤️🔥❤️🔥
#75 crore #8days #Vaathi success meet 🔥#cakecuttingfunction@dhanushkraja#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @adityamusic @SitharaEnts @7screenstudio @RIAZtheboss #வாத்தி. pic.twitter.com/IKrFUtpM6V— meenakshisundaram (@meenakshinews) February 25, 2023