
குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் வரும். அதனை சரி செய்து சேர்ந்து வாழும் தம்பதிகள் அதிகம். அதே நேரம் ஒரு சில பிரச்சனைகளுக்காக வருந்திக்கொண்டு விவாகரத்து கேட்டு பிரியும் தம்பதிகளும் உள்ளனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே லிஸ்டில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், மூன்றாவது இடத்தில் உத்தரப்பிரதேசமும், நான்காவது இடத்தில் மேற்கு வங்காளமும் இருக்கிறது. டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த லிஸ்டில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் விவாகரத்து கேட்பவர்களின் 50 சதவீதம் பேர் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 35 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 சதவீதம் பேர் 35 வயதுக்கு மேல் இருப்பவர்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறது.