சமூகவலைத்தளங்களில் சென்ற சில நாட்களாகவே நடிகை தமன்னா குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. இதனிடையே “ஜீ கர்தா” எனும் வெப் தொடரில் அவர் மிகவும் தாராளமாக நடித்துள்ளார். அதாவது, படுக்கையறை காட்சி, மிக மிக நெருக்கமான காட்சி, உடல் அசைவுகள் என அவர் நடித்துள்ள காட்சிகளின் வீடியோக்கள், ஸ்க்ரீன்ஷாட்டுகள் போன்றவை சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமன்னாவின் தாராள நடிப்பை பார்த்து ரசிகர்கள்  அதிர்ச்சியடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கும், சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமன்னா தமிழில் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் “போலா சங்கர்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.