கேரள காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி குறித்து X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை சற்றும் மதிக்காமல் பேசி வந்த பிரதமர் மோடி, இன்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வணங்குவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள பதிவில், “அந்த பயம் இருக்கணும் டா” என துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய வசனத்தை பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகின்றது.