
10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். மாணவர்களின் பெற்றோர்களும் மேடையிலேயே விஜயை பாராட்டி பேசினர். ஒரு மாணவரின் தந்தை கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆக பரிசு வழங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
தளபதிக்கு நன்றி ❤️#VIJAYHonorsStudents pic.twitter.com/Oe1bNUrlsk
— TVK IT Wing (@Actor_Vijay) May 30, 2025
அதனை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என கூறினார். மேலும் கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால் இன்றிலிருந்து விஜய் இளைய காமராஜர் என்று அழைக்கப்பட வேண்டும் என கூறினார்.
இதனை கேட்டதும் ஷாக்கான விஜய் அந்த நபரின் தோளில் கை வைத்தபடியே சிரித்தார். அந்த வீடியோவை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.