நீட் தேர்வு பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வது தான் ஒரே தீர்வு என்று விஜய் நேற்று விருது விழாவில் பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது தான் ஒரே தீர்வு. மேலும் தற்காலிக தீர்வாக சிறப்பு பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன்மூலம். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும்  பேசினார்.

இந்நிலையில் மாணவர்கள் வரவேற்கும் நீட் தேர்வை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கும் கட்சிகளின் கூட்டத்தில் விஜய் சேர்ந்திருக்கிறார் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், “நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் திமுக கூட்டணிதான். இப்போது அவர்களே அதனை எதிர்க்கிறார்கள். விஜய்யும் அவர்களை ஆதரிக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.