இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலவரம் தீவிரமடைந்த நிலையில், உலக நாடுகளின் கவனமும் இவ்விரு நாடுகளின் நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தச் சவாலான சூழலில், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் காணொளியில், இந்தியா குறித்து ஆப்கானிஸ்தான் மக்கள் வெளிப்படுத்தும் அன்பும் மதிப்பும் அனைவரையும் ஈர்த்துள்ளது.

 

இந்தியா தனது நாட்டு மக்களுக்கு மிகவும் பழைய நண்பர்கள் என ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர். “இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் பாகிஸ்தானியர்கள் வந்தால் நாங்கள் திட்டுவோம்” என ஒருவர் நகைச்சுவையுடன் கூற, அந்த இடத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

மேலும், “நீங்கள் இந்தியரா அல்லது பாகிஸ்தானியரா?” என்று இந்திய சுற்றுலா பயணி கேட்டபோது, “நீங்கள் பாகிஸ்தானியர் என்று தெரிய வந்திருந்தால் சண்டையிட்டிருப்பேன்; இந்தியர் என்பதை அறிந்தபின் மகிழ்ச்சி” என அன்புடன் ஆப்கானியர் பதிலளித்துள்ளார்.  இது இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள் எவ்வளவு ஆழமாகவும், பழமையானவை என்றும் வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவை ஃபசல் ஆப்கான் என்ற நபர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “ஆப்கானியர்களின் அற்புதமான விருந்தோம்பல்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த காணொளி, பாகிஸ்தானைச் சுற்றியுள்ள நாடுகளின் உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கையும் வெளிக்காட்டுகிறது.