வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது குடித்துவிட்டு தாக்குதல் நடத்தினாரா மா.கா.பா. ஆனந்த்? இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மா.கா.பா. ஆனந்த் ஒரு கோபமான பேட்டியை அளித்துள்ளார். அதில், அடிப்படை ஆதாரமற்ற இத்தகைய வதந்திகள் தன் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே திட்டமிட்டு பரப்பப்படுவதாக அவர் சாடியுள்ளார்.
மேலும் “நண்பர்களாகப் பழகும் எங்களுக்குள் இதுபோன்ற எந்தவொரு கசப்பான சம்பவமும் நடக்கவில்லை இது போன்ற கீழ்த்தரமான பொய்களைச் செய்தியாக வெளியிடும் முன் குறைந்தபட்ச உண்மையை ஆராயுங்கள்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
குடித்துவிட்டு வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை தாக்கினேனா? மா.கா.பா ஆனந்த் ஆவேச பேட்டி#MaKaPaAnand | #Pugazh | #GanaVinoth | #Diwakar pic.twitter.com/v1k6Il0xcU
— PttvOnlinenews (@PttvNewsX) April 15, 2026
“>
இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் நோக்கில் உருவாக்கப்படும் இது போன்ற போலிச் செய்திகள், தனிநபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாகப் பாதிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். திவாகர் தனக்கு ஒரு தம்பி போன்றவர் என்றும், தங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து திவாகர் தரப்பிலிருந்தும் இதுவரை எந்தப் புகாரும் எழாத நிலையில், தரம் தாழ்ந்த யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் அந்தப் பேட்டியில் காட்டமாகப் பேசியுள்ளார்.
