
மராட்டிய மாநிலம் மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அனில் சத்தியநாராயணன் என்ற வாலிபர் அந்த பெண்ணை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று மது போதையில் இருந்த அனில் சத்யநாராயணன் அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற இளம்பெண் சமையலறைக்கு ஓடினார். அங்கு பின் துரத்தி வந்த அந்த வாலிபர் தனது அந்தரங்க உறுப்பை காட்டி அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரது அந்தரங்க உறுப்பை அருகில் இருந்த தோசை கரண்டியால் தாக்கியுள்ளார். இதனால் அந்த வாலிபருக்கு தாங்க முடியாத வழி ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர் வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்திற்கு சென்று இச்சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துடன் இதுகுறித்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.