
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே 22ஆம் தேதி அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மகேந்திர சிங் என்றவர் அவருடைய உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்து மொட்டை அடித்து கழுத்தில் செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொடூர செயலை செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.