
மிக அதி வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்தாக வந்தே பாரத் ரயில் அமைந்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிகமாக வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கிளம்பிய வந்தே பாரத் ரயில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது சிராலா ரயில் நிலையத்தை வந்தே பாரத் ரயில் கடந்த போது திடீரென ட்ராக்கின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. அதிவேகமாக வந்த ரயில் என்பதால் நாய் மோதிய வேகத்தில் ரயிலின் சக்கரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டது.
இதனால் வந்தே பாரத் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சக்கரத்தின் உள்ளே நாய் ஒன்று சிக்கியிருந்ததும், அதனால் நட்டு போல்ட் உடைந்து சேதம் அடைந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சென்னை ரயில்வே நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை ரயில்வே நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதன் பெயரில் சக்கரத்தின் உள்ளே உடைந்த நட்டை மாற்றி சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் தாமதமாக வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.