
சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு அரசு துறைகள் செயல்படுகிறது. இந்த கட்டிடம் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் திடீரென இன்று காலை விரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை மேலே உள்ள ஒரு டைல்சில் மட்டும்தான் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே அங்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அனைத்து ஊழியர்களும் உள்ளே செல்லுங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் ஊழியர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் அமைச்சர் எ.வ.வேலு விரிசல் ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கட்டிடத்தின் உறுதித் தன்மை நிலையாக தான் இருக்கிறது. டைல்ஸ் 14 வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டதால் அதுதான் சேதமடைந்துள்ளதே தவிர மற்றபடி கட்டிடம் நிலையாக தான் இருக்கிறது எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.