தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கிறது. தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு செம்பியன்மாதேவியில் பகுதியில் தொடர் மழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் கவிழழகன் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனின் தந்தை, தங்கை ஆகியோரை படுங்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.