ஹைதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூருக்கு வந்தது. அங்கு ரசாயனத்தை இறக்கிவிட்டு காளிங்கராயபாளையம் பகுதியில் சுத்தம் செய்வதற்காக லாரி வந்தது. இதனையடுத்து 2 தொழிலாளர்கள் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விஷ வாயு தாக்கி 2  பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 தொழிலாளர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.