தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு வழக்கம் போல மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் வீரேன் ஜெயின் என்ற சிறுவன் மதிய உணவுக்கு வீட்டில் செய்து பூரிகளை எடுத்து சென்றுள்ளார். ஒரே நேரத்தில் சிறுவன் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றதாக தெரிகிறது. இதனால் பூரி மூச்சு குழாயை அடைத்தது. சிறிது நேரத்தில் மூச்சு விட முடியாமல் சிறுவன் உயிரிழந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வீரேன் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.