
குமரி மாவட்ட எல்லையான பாறசாலையில் யூடியூபர்களான செல்வராஜ் (45) மற்றும் அவரது மனைவி பிரியா (40) தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குமரி கேரள எல்லையில் உள்ள பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்த இவர்களுக்கு எர்ணாகுளத்தில் கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளார். இந்த தம்பதி யூடியூபில் வீட்டு நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புகள் போன்ற விடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் யூடியூப் சேனலில் கடைசியாக ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தனர். எர்ணாகுளத்தில் இருந்து இன்று காலை வீட்டுக்கு வந்த மகன், கதவு திறந்திருப்பதை பார்த்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பிரியா கட்டிலில் இறந்த நிலையிலும், செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டனர்.
இந்த தகவலைப் பெற்ற பாறசாலை போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.