சிக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மெட்சல் நோக்கி சென்ற எம்எம்டிஎஸ் ரயிலில் தனியாக பயணம் செய்த 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் நேற்று முன்தினம் ரயிலில் பயணம் செய்துள்ளார். அல்வால் ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் இறங்கியதும் 25 வயதுடைய நபர் அந்த பெண்ணுக்கு அருகே சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். அவரது செயலுக்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் இளம்பெண்ணை வற்புறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் தன்னை காத்துக் கொள்ள இளம்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார்.

இதனால் அவரது தலை, கன்னம், கை, இடுப்பு பகுதியில் காயமடைந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை தேடி வருகின்றனர். ஏற்கனவே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல மற்றொரு பெண்ணுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.