கொல்கத்தா ஹஸ்னா பதில் 26 வயது உடைய இளம் பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் பீகாரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த இளம் பெண் மட்டும் கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளம்பெண் டாக்டர் நூர்ஆலம் சர்தார் என்பவர் நடத்திவரும் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அந்த டாக்டர் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பது போல நடித்து மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த இளம் பெண்ணை நூர்ஆலம் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து அந்தப் பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி அறிந்தார்.

உடனே டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் இளம்பெண்ணை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 4 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை என்றால் வீடியோ காட்சிகளை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் 4 லட்ச ரூபாய் கொடுத்தார். அதன் பிறகும் டாக்டர் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நூர் ஆலமை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.