
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து உள்ளூர் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாமுவேல்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த 2 வருடங்களாக TNPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முயற்சிசெய்து வந்துள்ளார். மேலும் சாமுவேல்ராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.