
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் காரசாலா என்பவர் பாதிரியாராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆலய நிர்வாகியான ஹெர்மேஷ்(66) என்பவர் அருளை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஹெர்மேஷ் அருளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அருளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹெர்மேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.