மத்திய பட்ஜெட்டில் சமீபத்தில் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன் எதிரொளியாக தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது அதனை தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது iphone விலையை 3.4 சதவீதம் குறைத்துள்ளது.

இதனால் ஐபோன் ப்ரோ மாடலின் விலை 5,100 ரூபாயும், ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை 6000 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13, 14, 15 ஆகிய மாடல்களின் விலை 3000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்இ- இன் விலை 2300 குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த சமீபத்திய விலைகளை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.