அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2026 தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அதிமுகவை சுயநலம்  மற்றும் பதவி வெறி காரணமாக கபளிகரம் செய்துள்ளனர். பெரும் தோல்வியை அதிமுக சந்தித்த நிலையிலும் மெகா கூட்டணி என்று தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றுகிறார். அவர் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஒரே ஒரு வழி பாஜகவுடன் கூட்டணி வைப்பது மட்டும் தான். இல்லையெனில் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதிவிடுவார்.

பெரும்பாலான அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனித்துப் போட்டி என்று கூறுவது தவறு என்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியது தவறு என்றும் கூறியுள்ளார். ஒருவேளை அதிமுக இடம்பெறும் கூட்டணியில் நான் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் என்றால் நான் 2026 தேர்தலில் இருந்து போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன். என்னை சார்ந்தவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிடத் தொகுதிகள் கிடைத்தால் போதும். நான் போட்டியிடவில்லை. தனித்துப் போட்டி என்று  திமுகவுக்கு வழி விடாமல் பாஜகவுடன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைக்க வேண்டும். மேலும் பாஜகவின் கூட்டணிக்கு வாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியை நான் அழைக்கிறேன் என்றார்.