
சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக செயலாளராக சண்முகம் (64) என்பவர் இருந்தார். இவர் நேற்று இரவு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே வந்த நிலையில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்ப கும்பல் அவரை வழிமறித்தனர். அவர்கள் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சண்முகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்த நிலையில் தற்போது குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். அதன்படி திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சதீஷ் சேலம் மாநகராட்சி 55 வது வார்டு கவுன்சிலராக இருப்பவரின் கணவர் ஆவார். மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.