
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று முன்தினம் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய அளவில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட கடந்த 1997 ஆம் ஆண்டில் இருந்து கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதனால்தான் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைவது அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்திய கூறுகள் கிடையாது.
தற்போது எல்லா கட்சிகளும் இதைப் பற்றி பேச தொடங்கியுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறினால் மட்டும்தான் அது சாத்தியமாகும். 2016ம் ஆண்டில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பங்கு உண்டு. சிறிய கட்சிகள் பேசுவதால் கூட்டணி சாத்தியமாகாது அதிமுக மற்றும் திமுக சொன்னால் மட்டும்தான் அது சாத்தியமாகும் என்றார். மேலும் நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று கூறிய நிலையில் இந்த விஷயம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.