
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செய்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்து வருகிறார்; “எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்; மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்; நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு கண்டனம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்; ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்தியஅரவை வலியுறுத்தி தீர்மானம்” உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
தீர்மானம் – 1 :
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் ஆளுமை திறனோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக பொறுப்பெற்று கழகத்தை வழிநடத்தி வரும் நம் அனைவரின் போற்றுதலுக்குரியவரும், தொண்டர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆட்சி செய்து வரும் எழுச்சி நாயகரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்…
தீர்மானம் – 2 :
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும் தன் உயிர்மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் மதுரையில் நடத்திய கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும்…
தீர்மானம் – 3:
வட கிழக்கு பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், காலத்தே மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல் மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு புயலின் தாக்கத்தால் பெய்த பெரும் மழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு அவர்களின் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம். பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிடவும் வலியுறுத்தல்..
தீர்மானம் – 4 :
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும். வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பு செய்யாமல், இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 5 :
மீனவர்கள் நலன் காக்க திமுகவால் தாரைவாக்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் – 6 :
மாநில உரிமைகள் பறிபோனதற்கு திமுகவே முழு முதல் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும் பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் விடியா தி மு க அரசுக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 7 :
சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும், திமுகவின் மக்கள் விரோத போக்கிற்கும் கடும் கண்டனம்.
தீர்மானம் – 8 :
ஊழலில் திளைத்து நிற்கும் திமுக கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம். ஊழல் ஆட்சி நடத்தும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 9 :
சிறுபான்மையின மக்கள் ஆன இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுடைய நலனை பாதுகாக்கவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும் விடியோ திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
தீர்மானம் – 10 :
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023 ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது, ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
தீர்மானம் – 11 :
ஈழத் தமிழர்கள் நலன் காக்க ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டிய மத்திய அரசை வலியுறுத்தல்
தீர்மானம் – 12 :
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக பெய்து, நெற் பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 13 :
நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலனையும் பாதுகாக்க தவறிய விடியா திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் – 14 :
பட்டியல் இன மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம்.
தீர்மானம் – 15 :
அவசர கதியில் பொது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 16 :
தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க சட்டத்திருத்தம் தேவை. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இருக்க வலியுறுத்தல்.
தீர்மானம் – 17 :
சமூக நிதியை குழிதோண்டி புதைத்து சமூக நீதிக்கு எதிராக திமுக மக்கள் விரோத போக்குக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 18 :
தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுகவின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 19 :
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காத மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 20 :
நாடாளுமன்ற தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் தேவையை வலியுறுத்தி தீர்மானம்.
தீர்மானம் – 21 :
நாடாளுமன்ற தேர்தல் அதிமுக 40 தொகுதிகளும் எழுச்சி வாகை சூட கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் கழகப் பணியாற்ற வேண்டுகோள்.
தீர்மானம் – 22 :
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என கூறி மக்களை ஏமாற்றிய திமுக அரசின் முதல்வருக்கு கடும் கண்டனம்.
தீர்மானம் – 23 :
அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதோடு சொத்து வரி வீட்டு வரி உயர்வு செய்த திமுக அரசுக்கு கடும் கண்டனம்