
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது வருகிற 29ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வரும் நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது தொடர்பாக மதுரை அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மக்கள் விரோத திமுக ஆட்சியில் நாம் அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். திமுகவின் அதிகார துஷ்பியோகத்தால் அதிமுகவின் கொடியை ஏற்றுவதற்கு கூட தற்போது எதிர்நீச்சல் போட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் ஆதரவுடன் வருகிற தேர்தலில் தூக்கி எறிவோம். மேலும் மதுரை வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதோடு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.