பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக நேற்று கட்சியின் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி என்பது தொண்டர்கள் விருப்பமாக இருந்த நிலையில் பாமக தலைமையின் முடிவால் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளதால் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக 34 வன்னியர் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது.