அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சின்னசாமி, இன்று (டிச.03)  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்கநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். மேலும், அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இவர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தலைமை சரியான முறையில் இயங்கவில்லை, உழைப்பவர்களுக்கு வேலை இல்லை என்றும்  திமுக ஆட்சியை சிலர் விமர்சிக்கிறார்கள் ஆனால் சிறப்பான ஆச்சி நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர் – என தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவைப் பகுதியை அமோக வெற்றியின் இலக்காகக் கொண்டு திமுக, அதிமுகவின் முக்கிய தலைவர்களைத் தங்கள் வசம் இழுத்து வரும் நிலையில், இந்த எதிர்பாராத இணைவு காரணமாக இபிஎஸ் (EPS) தரப்பினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இணைவின் போது முன்னாள் அமைச்சர்கள் பாலாஜி, ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.