தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து  டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது குறித்து  தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று கூறியதாவது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பலர் முயற்சி செய்தாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருப்பதால் அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றார்.

அதன் பிறகு 2026 சட்டமன்ற தேர்தல் தான் கடைசி. அதோடு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சிக்கு மூடு விழா நடத்தி விடுவார். இரட்டை இலை சின்னத்திற்காக மட்டும்தான் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பொறுமையாக இருக்கிறார்கள்.

அதன் பிறகு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வயதானவர்கள் ஆகியோர்களை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வீட்டில் இருந்து கொண்டு பிரியாணி சாப்பிடுகிறார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான மனோபாவம் இருந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 2-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதே நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க நாங்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்வோம். மேலும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.