
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டன. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் அதிக அளவில் வெற்றி கிடைத்திருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை எப்படி திமுகவுக்கு கோட்டையாக திகழ்கிறதோ அதேபோல அதிமுகவின் கோட்டையாக தென் மாவட்டங்கள் இருந்தது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்து அங்கு அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு அப்பகுதி அதிமுக சீனியர் தலைவர்கள் இபிஎஸ்-ஐ தங்கள் தலைவராக இன்னும் ஏற்கவில்லை, இதனால் அவர்கள் உள்ளடி வேலை பார்த்ததே தோல்விக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.