
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடும்போது உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட போவது கிடையாது என்று கூறிவிட்டார்.
இதனால் அவர் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்று கேள்வி எழுந்த நிலையில் இன்று மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வைத்திலிங்கத்திடம் இது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் கூறியதாவது, எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் இது பற்றி ஓபிஎஸ் நாளை அறிவிப்பார் என்று கூறினார்.