ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட் தற்கொலை செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஒரு வருடத்துக்கு முன் அவரை போக்குவரத்து அமைச்சராக நியமித்திருந்தார். ஆனால் கடந்த திங்களன்று, ஏதுவும் தெரிவிக்காமல் அவரை பதவியில் இருந்து நீக்கும் ஆணையை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள், மாஸ்கோவின் புறநகர் பகுதியில் ஸ்டாரோவாய்ட் தன்னுடைய தனிப்பட்ட காரில் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் காரில், துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடைத்ததாக ரஷ்ய புலனாய்வுத் துறை கூறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது, ரஷ்ய போக்குவரத்து அமைச்சகத்தின் தற்காலிக பொறுப்பாளராக துணை அமைச்சர் ஆண்ட்ரி நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டாரோவாயிட் பதவி நீக்கத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் வெளியிடப்படவில்லை. ஆனால், அவருடைய திடீர் தற்கொலை, அரசாங்கத்தின் உள்நிலை பணியாளர்களிடையே மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.