
ஒடிசாவில் செல்போன் வடித்ததில் ஐந்து வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மகாராஜ்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகன் உள்ளார். இந்த சிறுவன் தனது பெற்றோரின் செல்போனில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியது.
இதனால் சிறுவனின் கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே தங்களது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.