விருதுநகரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், அரசு மரபுப்படி (புரோட்டோகால்) விளம்பரப் பேனரில் தனது பெயரை முதலிடத்தில் குறிப்பிடாதது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கடுமையான அதிருப்தி தெரிவித்துக் கண்டித்தார். விருதுநகரில் நடைபெற்ற அரசுப் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார். அப்போது விழாவின் மேடையில் வைக்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வப் பேனரில், அமைச்சர் ச.கீர்த்தனாவின் பெயர் முதலிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் அச்சிடப்பட்டிருந்தது.
தனது பெயர் புரோட்டோகால் படி முன்னிலைப்படுத்தப்படாததைக் கண்டு கோபமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, விழா மேடையிலேயே அதிகாரிகளை அழைத்து, “உங்களுக்குப் புரோட்டோகால் தெரியாதா? இது குறித்து ஏற்கனவே பலமுறை சொல்லியாச்சு” எனக் கடிந்துகொண்டார். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தலையிட்ட மாவட்ட ஆட்சியர், “இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது” என்று உறுதியளித்து அமைச்சரைச் சமாதானப்படுத்தினார்.
“அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது?
மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் என் பெயரே முதலில் வர வேண்டும்..”- விருதுநகரில் சிலம்ப வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி#MinisterJegadeeswari | #Virudhunagar |… pic.twitter.com/F8ivezF0Gc
— PttvOnlinenews (@PttvNewsX) June 26, 2026
