இந்தியாவில் பல மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பருவ கால நோய் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. அதாவது பொதுவாக பருவ காலங்களில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிப்பது வழக்கம்தான். குடிநீர் மற்றும் கொசுக்கள் மூலம் அதிக அளவில் நோய் பாதிப்பு ஏற்படுவதால் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலங்களுக்கு முன்னதாக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போலவே மழைக்கால நடவடிக்கைகளாக புதுச்சேரியில் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே நோய் தொற்று பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவ முகாமை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.