ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.