இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் உள்ள பணத்தை நம்மளுக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். ஆதார், செல் போன் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால் மோசடி செய்பவர்கள் எளிதில் நம்முடைய தனி விபரங்களை திருடி வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் சிம் கார்டு வழியாக மோசடிகள் அதிகமாக நடைபெறுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும் தொலைதொடர்பு துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் செல்போன் சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

டிஜிட்டல் பணம் மோசடியை தடுப்பதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . அதிகரித்து வரும் மோசடியை தடுப்பதற்கும், வங்கிகளில் ஆன்லைன் செயல்முறையை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.   சிம்கார்டு விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளது. kyc சரிபார்ப்பு விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டில் ஏதேனும் மோசடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி அனைவரும் எளிதில் சிம் கார்டு வாங்க முடியாது.  விதிமுறைகள் மற்றும் சரிபார்ப்புகளுக்கு உட்பட்டே சிம் கார்டுகள் வழங்கப்படும்.