இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதேசமயம் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் மருந்து இருப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.