பாகிஸ்தானில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெய்யும் பருவமழையால், மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுவதால் பருவமழை மோசமானதாக மாறுகிறது. கடந்த 2022 ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் பெய்த பருவமழையின் காரணமாக பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியதோடு மில்லியன் கணக்கான மக்கள்கள் இடம்பெயர்த்தனர்.

இதனால் விவசாயம்  அழிந்ததோடு, மக்கள் இன்னும் மீளா துயரில் இருக்கின்றனர். இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதுகுறித்து அந்த மக்கள் கூறியதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு மழைக்கு பிறகு எல்லாம் அழிந்து விட்டது. எங்கள் குழந்தைகள் விவசாயத்தில் இருக்கும் எல்லா வேலைகளையும் பார்ப்பார்கள் ஆனால் அதற்கு இன்று வழியில்லை. ஏனென்றால் பருவ மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நீரில் நச்சுத்தன்மை கலந்து துர்நாற்றம் வீசியது. நாங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களது பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஷமிலா (14) மற்றும் அவருடைய சகோதரியான அமினா (13) என்ற குழந்தைக்கும் திருமணம் செய்து கொடுத்தனர். அதாவது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்பதற்காக, அந்த சிறுமிகளின் பெற்றோர் இத்தகைய செயல்களை செய்கின்றனர். இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெய்த மழைக்குப் பிறகு 45 சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் 15 பேர் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். இதனால் வானிலை நிகழ்வுகள் கூட சிறுமிகளை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது