டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும் அண்ணாமலை குறித்தும் சந்திப்பில் பேச உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த சிவி சண்முகமும் சென்றிருப்பதால் அவர் அண்ணாமலையை பற்றி அமித்ஷாவிடம் புகார் சொல்லலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் தரவில்லை என்பதால் நேற்று இரவே அவர்கள் தமிழ்நாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.