தமிழகத்தில் வீடற்றவர்களுக்கு உதவும் விதமாக அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏழை எளியவர்களுக்கு அரசு வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது . இதற்காக  மாவட்டங்கள் முழுவதிலும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது திருவள்ளூர் மாவட்டம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏழை எளியோர்க்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிப்பவர்கள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் அல்லது பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரடியாக விண்ணப்பங்களை அளிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பல லட்சம் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஒரு வீட்டின் மதிப்பில் 7 லட்சம் அளவிற்கு தமிழக அரசு மானியமாகவும், 1.5 லட்சம் மதிப்பில் மத்திய அரசு  மானியமும் வழங்கப்படுகிறது மீதம் தொகை பயனாளிகள் செலுத்த வேண்டும்.